கட்டாரில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இலங்கை அறிக்கை

0
77
Article Top Ad

கட்டார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், இதுகுறித்து இலங்கை தமது கரிசனையை வெளியிட்டுள்ளது.

கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அந்த அறக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.