வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்க சட்டத் திருத்தம்

0
82
Article Top Ad

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில், சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் வாக்களிக்கும் அதிகாரமானது, தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. தற்போதுள்ள தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ சட்டங்களோ உருவாக்கப்படவில்லை.

எனினும், இந்தியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் போன்ற பல ஆசிய நாடுகள் தமது வெளிநாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் சட்டரீதியான மூலோபாயங்களை தயாரித்துள்ளதோடு, இலங்கையிலும் அவ்வாறான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அதன் பிரகாரம்,வெளிநாடுகளில் வசிக்கும் பிரஜைகளின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு அல்லது புதிய சட்டத்தைத் தயாரிப்பதற்கான விடயங்களை ஆராய்வதற்காக தேர்தல் ஆணைக்குழு, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் ஏனைய ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அலுவலர்களுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்காக பொதுநிர்வாக, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.