ஐ.நா. மனித உரிமை பேரவையின் உயர்ஸ்தானிகரை சந்தித்தார் அநுர

0
71
Article Top Ad

ஐக்கிய நாடுகள் 80வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் உடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான இலங்கையின் ஈடுபாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கை, உயர் ஸ்தானிகரினால் அண்மையில் முன்வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஐ.நா. பேரவையின் தொடக்கநாளின் போது இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொண்டு இலங்கையின் நிலைப்பாட்டை முன்வைத்திருந்தார்.

குறிப்பாக உள்ளக பொறிமுறையின் ஊடாகவே பொறுப்புக்கூறும் நடவடிக்கையை இலங்கை மேற்கொள்ளும் என்பதை அவர் திட்டவட்டமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.