பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள துணை ராணுவ எல்லைப் படையின் தலைமையகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களின் இருவர் பாதுகாப்புத் தரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் 10 பேர் பொதுமக்களாவர் என மாகாண சுகாதார அமைச்சர் பக்த் முகமது கக்கர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகாரிகள் இந்தத் தாக்குதல் ஒரு தற்கொலைக் குண்டுவெடிப்பு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, “தவறாக வழிநடத்தப்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின்படி செயற்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை. அத்தோடு, தற்கொலை குண்டுத்தாக்குதலுக்கு இதுவரை எந்த தரப்பும் பொறுப்பேற்கவில்லை.

