பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம் – 69 பேர் உயிரிழப்பு

0
219
Article Top Ad

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்றிரவு (30) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார்  150 பேர்வரை காயமடைந்துள்ளனர் என்றும் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. போகோ நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் இடிந்து, அங்கு கூடியிருந்தவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றபோதும், குறித்த நிலநடுக்கத்தின் பின்னர் 5 ரிக்டர் அளவிலான நான்கு தொடர் நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன. இதனால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.