மூட்டை மூட்டையாக ஆயுதங்கள் மீட்பு

0
80
Article Top Ad

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து பல வகையான அடையாளம் தெரியாத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 74 T-56 ரக மெஷின்கள், 35 LMG ரக டிரம்கள் மற்றும் 5 MPMG டிரம்கள் பெட்டிகள் அடங்கும்.

மேலும், தோட்டாக்களுடன் கூடிய சந்தேகத்துடனான 2 பெட்டிகள் மற்றும் ஆயுதங்களாக சந்தேகிக்கப்படும் 2 மூட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் விசாரணை செய்து மீட்கப்பட்டன.

வெஹெரகல நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதால், இந்த பொருட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. அந்த இடம் கோனகனார் பொலிஸ் பிரிவுக்குட்பட்டது என்பதால் மேலதிக விசாரணைக்காக கோனகனார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும், நீர்த்தேக்கத்தின் மதகு அருகே இன்னும் நீர் இருப்பதால், கடற்படையின் சுழியோடிகளின் உதவியுடன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.