அரசுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கே தற்போதைய  தேர்தல் அழைப்புகள் – மஹிந்த தேசப்பிரிய

0
52
Article Top Ad

தற்போதைய மாகாண சபை தேர்தல் அழைப்புகள், வெறும் அரசுக்கு எதிரான பொதுமக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கே மேற்கொள்ளப்படுகின்றன என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுவரை எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றத்தில் அல்லது ஏனைய இடங்களில், இத்தேர்தல்கள் உண்மையாகவே அவசியம் என்பதைக் குறிப்பிடவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறிருக்கையில், மாகாண சபை தேர்தல்களின் தேவையை மக்கள் உணர்த்திய பின்னர் மட்டுமே, இதற்கான கோரிக்கையை நியாயப்படுத்த முடியும் என்று மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தினார்.