காசா பணயக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவர் என நெதன்யாகு நம்பிக்கை

0
26
Article Top Ad

காசாவில் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் எதிர்வரும் நாட்களில் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்பிக்கை தெரிவித்தார்.

தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அவர், ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும், மேலும் காசா இனி இராணுவமயமாக்கப்படாது. அது எளிதான வழியாக இருந்தாலும் அல்லது கடினமான வழியாக இருந்தாலும், அந்த இலக்கு அடையப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தின் கீழ், பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. எனினும், நிராயுதபாணியாக்கம் குறித்து ஹமாஸ் எந்த உறுதியும் அளிக்கவில்லை. இதனிடையே, பிற பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, ஹமாஸ் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். “ஹமாஸ் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் அனைத்து ஒப்பந்தங்களும் நிறுத்தப்படும்,” என அவர் தனது சமூக வலைத்ததளத்தில் பதிவிட்டுள்ளார்.

காசா போருக்கு முடிவு காண அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் சமீபத்தில் 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றை ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இருதரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்தன.