Article Top Ad
முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம் நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மனித எலும்பு கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் பற்றைக்காடாக காணப்படும் பகுதியில் இந்த எலும்புக்கூடு நேற்று (4) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் குறித்த இடத்தை குற்றப் பிரதேசமாக அடையாளப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று காலை குறித்த இடத்திற்கு வருகை தந்த தடயவியல் காவல்துறையினர் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் விசாரணைகளின் பின்னரே இதுகுறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படும்.

