ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம்

0
242
Article Top Ad

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோஹாவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளின் பின்னர், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பகுதிகளில் மோதல்கள் தொடர்ந்து ஏற்பட்டன. சமீபத்தில் இம்மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், பலர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், கட்டார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தில் நேற்று (18) நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாக கட்டார் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், “போர்நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்து, அதன் செயல்பாட்டை நம்பகமான மற்றும் நீடித்த முறையில் கண்காணிப்பதற்காக இரு தரப்பினரும் தொடர்ச்சியான சந்திப்புகளை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.