இலங்கையில் பாதுகாப்பற்ற நிலையில் 17,000 சிறார்கள்!

0
69
Article Top Ad

இலங்கையில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் 17,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த சிறார்கள் தொடர்பில் அரசாங்கம் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சிறுவர்களையும் கைவிடாமல், ஒவ்வொருவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஜனாதிபதி நிதியால் செயல்படுத்தப்படும் உயர் கல்வியில் சிறந்த மாணவர்களை பாராட்டும் வடமேல் மாகாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக வாழத் தகுதியான ஒரு நாட்டை உருவாக்க ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.