வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை அறிமுகம்

0
39
Article Top Ad

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தும் சேவை இன்று (24) காலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் தொடங்கியது.

இந்நிகழ்வில், பேருந்து சாரதிகள் போதைப் பொருள் பாவித்துள்ளார்களா என்பதை கண்டறிய தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம், மருத்துவப் பரிசோதனைகளையும் நடத்தியுள்ளது.

வங்கி அட்டை நடைமுறை, மாகும்புர – மாத்தறை, மாகும்புர – காலி, மாகும்புர – பதுளை மற்றும் கொழும்பு – அம்பாறை ஆகிய அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

நாளை (25) கொழும்பு – வவுனியா, கடவத்தை – மகரகம, மாகும்புர – தங்காலை மற்றும் மாகும்புர – அங்குனுகொலபெலஸ்ஸ வரை சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கும் இதே சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் பிமல் குறிப்பிட்டார்.

டிசம்பர் மாதமளவில் சேவையில் ஈடுபடும் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைப் பேருந்துகளுக்கும் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பின்னர் 2026 ஆம் ஆண்டு இறக்குமதி நிறைவடைவதற்குள் மேல் மாகாணத்தின் அனைத்து பேருந்துகளுக்கும் இந்த சேவை விரிவாக்கப்படும் என்றும், மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், ஓய்வுபெற்ற கொமாண்டர் காமினி ஜயசிங்க கூறியுள்ளார்.