ஜேவிபி பொதுச்செயலாளருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

0
82
Article Top Ad

ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. லண்டன், வெம்பிளி பகுதியில் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு சென்ற ரில்வின் சில்வா, இன்று பிற்பகலில் லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்வுக்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

திருகோணமலையில் புதிய புத்தர் சிலை அமைத்தல் மற்றும் சிங்கள குடியேற்ற முயற்சிகள் நடந்துவருவதாக கூறி, அதனை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கிடையில், லண்டன் காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தி, டில்வின் சில்வாவின் வாகனம் அங்கிருந்து செல்லும் வகையில் பாதுகாப்பு வழங்கியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.