தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பக் கூடாது என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.
அதிகாரிகள் வந்து, நிலத்தின் பாதுகாப்பு குறித்து தெளிவான வழிகாட்டுதல் மற்றும் இறுதி அனுமதி வழங்கும் வரை, மிகவும் அபாயகரமான பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளுக்கு மீண்டும் செல்ல வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். இதனால், தற்போது பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், 7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பகுதிகளுக்கு வெளியிடப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மற்றும் வெளியேறுவதற்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதிக மழை காரணமாக பல இடங்களில் நிலம் நீரால் பூரணமாக ஈரமாகியிருப்பதால், அடுத்த சில நாட்களிலும் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், மண்மேடுகள் இடிந்து விழுதல் போன்ற அபாயங்கள் தொடரும் வாய்ப்பு அதிகம் என அவர் சுட்டிக்காட்டினார்.
நிலத்திலிருந்து விநோத சத்தங்கள் எதிரொலித்தல், நீர் ஊற்றுகள் தோன்றுதல் போன்ற சமிக்ஞைகள் தென்பட்டால், மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
சிவப்பு எச்சரிக்கை அமுலில் உள்ள பகுதிகள்
பதுளை மாவட்டம்
ஊவா பரணகம, ஹல்துமுல்ல, வெலிமட, பசறை, சொரணாதோட்ட, எல்ல, பதுளை, லுணுகலை, கந்தேகெட்டிய, மீகஹகிவுல, பண்டாரவளை, ஹப்புத்தளை, ஹாலி-எல
கொழும்பு மாவட்டம்
பாதுக்க, சீதாவக்க
கண்டி மாவட்டம்
உடுநுவர, பஸ்பாகே கோறள, பன்வில, தொலுவ, அக்குரண, தும்பனே, ஹதரலியத்த, உடுதும்பற, யட்டிநுவர, பஹததும்பற, குண்டசாலை, தெல்தோட்ட, மெததும்பற, பஹத்தஹேவாஹெட்ட, கங்கவட்ட கோறளை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய, கங்கஇஹல கோறளை, உடபலாத்த, மினிப்பே
கேகாலை மாவட்டம்
கலிகமுவ, மாவனல்லை, யட்டியாந்தோட்ட, தெஹியோவிட்ட, புலத்கொஹுபிட்டிய, ரம்புக்கன, வரக்காப்பொல, அரநாயக்க, ருவன்வெல்ல, தெரணியகல, கேகாலை
குருநாகல் மாவட்டம்
மாவத்தகம, மல்லவப்பிட்டிய, அலவ்வ, நாரம்மலை, பொல்கஹாவெல, ரிதீகம
மாத்தளை மாவட்டம்
பல்லேபொல, ரத்தோட்ட, யட்டவத்த, நாஉல, லக்கல பல்லேகம, உக்குவெல, மாத்தளை, வில்கமுவ, அம்பன்கங்கை கோறளை
நுவரெலியா மாவட்டம்
ஹங்குரன்கெத்த, மத்துரட்ட, நுவரெலியா, தலவாக்கலை, வலப்பனை, நில்தண்டாஹின்ன, அம்பகமுவ, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு

