டித்வா உயிரிழப்புகள் அதிகரிப்பு -அவுஸ்திரேலியா நேசக்கரம்

0
27
Article Top Ad

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்பிற்கு உதவும் நோக்கில்,  உடனடி அவசர நிவாரணமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலரை வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரணமாக பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

டித்வா புயலாம் ஏற்பட்ட மழை, வெள்ளம், மண்சரிவில் சிக்கி இதுவரை 355 பேர் உயிரிழந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 366 பேரை காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சீரற்ற வானிலை காரணமாக 318,252 குடும்பங்களைச் சேர்ந்த 1,156,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, நிவாரண செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.