இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக ஹத்துருசிங்க மீண்டும் வழக்கு

0
202
Article Top Ad

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக மீண்டும் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் வழக்கை சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மத்தியஸ்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது ஒப்பந்தம், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட நிதி இழப்புக்கும், நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கும், நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதற்கும் எதிராக 5 மில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டஈடு கோரி ஹத்துருசிங்க இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.