தமிழர் தேசம் மற்றும் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு பெற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சென்னை பயணம்

0
31
Article Top Ad

தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைப் பெற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (த.தே.ம.மு) குழு இவ்வாரம் சென்னை செல்லவுள்ளது.

தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்ட அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வாக ‘ஏக்கியராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசியல் யாப்பைத் திணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது.

  • தமிழ் மக்களுக்கு உண்மையான அரசியல் தீர்வு தமிழர் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி அரசியல் யாப்பாகும்.

  • சர்வதேச சமூகம், குறிப்பாக இந்திய அரசு, இலங்கை மீது தேவையான அழுத்தங்களை உருவாக்க வேண்டும்.

  • தமிழக அரசியல் தலைவர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

சென்னை செல்லவுள்ள குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகள்:

  • கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர் & பாராளுமன்ற உறுப்பினர்)

  • பொ. ஐங்கரநேசன் (தலைவர் – தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்)

  • செல்வராஜா கஜேந்திரன் (செயலாளர்)

  • த. சுரேஸ் (தேசிய அமைப்பாளர்)

  • க. சுகாஷ் (சிரேஷ்ட சட்டத்தரணி & உத்தியோகபூர்வ பேச்சாளர்)

  • ந. காண்டீபன் (சிரேஷ்ட சட்டத்தரணி & பிரசாரச் செயலாளர்)