இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி உதவி

0
81
Article Top Ad

 

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் 50 மில்லியன் டொலர் மதிப்பிலான திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று (20) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த திட்டம் டிஜிட்டல் துறையில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதுடன், அரசாங்க சேவைகளை நவீனமயப்படுத்தி, மக்கள் மற்றும் வணிகங்கள் அவற்றை இலகுவாகவும் வினைத்திறனாகவும் அணுகும் வகையில் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ், அரசாங்க சேவைகளை ஒரே இடத்தில் பெறக்கூடிய இணையத்தளம், அரச நிறுவனங்களுக்கு இடையே தகவல்களை பாதுகாப்பாகப் பகிர்வதன் மூலம் வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல், டிஜிட்டல் ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்கும் வசதி மற்றும் தேவைக்கேற்ப விரிவாக்கக்கூடிய நவீன தரவுத் தளம் ஆகியவை உருவாக்கப்படவுள்ளன.

மேலும், இந்த புதிய சேவைகளை பொதுமக்களும் அரச ஊழியர்களும் தன்னம்பிக்கையுடன் பயன்படுத்துவதற்குத் தேவையான பயிற்சித் திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.