மிலான்–கோர்டினா ஒலிம்பிக்கிற்கான கனடா ஆண்கள் ஹொக்கி அணியை அறிவித்தது Hockey Canada

0
34
Article Top Ad

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள மிலான்–கோர்டினா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான 25 பேர் கொண்ட கனடா ஆண்கள் ஹொக்கி அணியை Hockey Canada அறிவித்துள்ளது.

டிசம்பர் 31 அன்று முழுமையான அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கானர் மெக்டேவிட், சிட்னி கிராஸ்பி மற்றும் நேதன் மெக்கினன் போன்ற முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறுவது உறுதியாக இருந்தது.

மேலும், 2025 பெப்ரவரியில் நடைபெற்ற ‘ஃபோர் நேஷன்ஸ் ஃபேஸ் ஆஃப்’ தொடருக்குப் பின்னர், தேசிய அளவில் NHL நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது. அந்த தொடரில் கனடா அணி, அமெரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது.

அணிப் பட்டியல்:

முன்னணி வீரர்கள் (Forwards):
மெக்லின் செலெப்ரினி (சான் ஹோசே ஷார்க்ஸ்),
என்டனி சிரெல்லி (டாம்பா பே லைட்ட்னிங்),
சிட்னி கிராஸ்பி (பிட்ஸ்பர்க் பென்க்வின்ஸ்),
பிராண்டன் ஹேகல் (டாம்பா பே),
போ ஹோர்வாட் (நியூயோர்க் ஐலண்டர்ஸ்),
நேதன் மெக்கினன் (கொலராடோ அவலாஞ்ச்),
பிராட் மார்சண்ட் (புளோரிடா பாந்தர்ஸ்),
மிட்ச் மார்னர் (வேகாஸ் கோல்டன் நைட்ஸ்),
கானர் மெக்டேவிட் (எட்மண்டன் ஆய்லர்ஸ்),
பிரேடன் பொயிண்ட் (டாம்பா பே),
சாம் ரெய்ன்ஹார்ட் (புளோரிடா),
மார்க் ஸ்டோன் (வேகஸ்),
நிக் சுஸூகி (மொன்ட்ரியல் கனேடியன்ஸ்),
டோம் வில்சன் (வொஷிங்டன் கெப்பிடல்ஸ்)

பாதுகாப்பு வீரர்கள் (Defencemen):
ட்ரூ டௌட்டி (லொஸ் ஏஞ்சல்ஸ் கிங்ஸ்),
தோமஸ் ஹார்லி (டல்லாஸ் ஸ்டார்ஸ்),
கேல் மேக்கர் (கொலராடோ),
ஜோஷ் மோரிசி (வின்னிபெக் ஜெட்ஸ்),
கோல்டன் பரைகோ (செயின்ட் லூயிஸ் ப்ளூஸ்),
டிராவிஸ் சான்ஹைம் (பிலடெல்பியா ஃப்ளையர்ஸ்),
ஷே தியோடோர் (வேகாஸ்),
டெவான் டோவ்ஸ் (கொலராடோ)

கோல் காப்பாளர்கள் (Goalies):
ஜோர்டன் பினிங்டன் (செயின்ட் லூயிஸ்),
டார்சி குஎம்பர் (லொஸ் ஏஞ்சலஸ்),
லோகன் தொம்சன் (வொஷிங்டன்)