பாடசாலை மாணவர்களை குறிவைக்கும் போதைப்பொருள் வியாபாரிகள்

0
113
Article Top Ad

பாடசாலை மாணவர்களிடையில் போதைப் போதைப் பொருள் பாவனை குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் F. U. வூட்லர் தெரிவித்தார்.

இன்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பாடசாலைகளுக்கு அருகே சென்று “மாவா” மற்றும் பாபுல் போன்ற போதைப் பொருட்களை, ஐஸ்-கிரீம், பட்டாசு, டொபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகள் ஊடாக வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த வகையான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், இதுவரை 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த தயவு தாட்சண்யங்களும் காட்டப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார். குறிப்பாக, கொகைன், ஐஸ் அல்லது ஹெரோயின் ஐந்து கிராமிற்கு மேல் வைத்திருப்பது மரணதண்டனைக்கு உட்பட்ட குற்றமாகும் என ASP வூட்லர் கூறினார்.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை அவதானித்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும், பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.