கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு

0
120
Article Top Ad

இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான இராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த பாம்புக்கு இபு பரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இபு பரோன் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. உலகின் மிக நீளமான பாம்பு இனமாக ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இவை பொதுவாக 3 முதல் 6 மீட்டர் (10 முதல் 19 அடி) வரை நீளம் கொண்டவை. 20 அடிக்கு மேல் நீளமான பாம்புகள் மிகவும் அரிதானவை. இபு பரோனின் நீளம் அதற்கு மயக்க மருந்து கொடுத்து எடுக்கப்படவில்லை என்று கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒருவேளை அதற்கு மயக்க மருந்து கொடுத்து அதன் உடல் முழுமையாக ஓய்வெடுக்கும்போது அளவீடு செய்தால் அது மேலும் 10 சதவீதம் நீளமாக 7.9 மீட்டர் வரை (26 அடி) இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றாலும், அவற்றின் அளவு மற்றும் வலிமை காரணமாக கால்நடைகளைக் கொல்லும் தன்மை கொண்டவை எனக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், மனிதர்களையும் கொல்லும் திறன் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது.