லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு

0
116
Article Top Ad

இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 4,610 ரூபாவாகும்.

5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,850 ரூபாவாகும்.

2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 860 ரூபாவாகும்.