Article Top Ad
2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மேலதிக 43 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இரண்டுபேர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, விமல் வீரவங்ச அணியினர் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
சுகவின் எம்.பி துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்திருந்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பை புறக்கணித்திருந்தது.