கோட்டாவின் காலத்தில் கடன் மறுசீரமைப்பில் அக்கறை கொள்ளவில்லை!

0
109
Article Top Ad

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தலையிடுமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி கோரிக்கை விடுக்கப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அப்போதைய மத்திய வங்கி ஆளுநரின் பணிப்புரையின் பேரில் அப்போதைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

கடனை மறுசீரமைப்பதற்காக கடன் வழங்கிய நாடுகளின் அனுமதியைப் பெறுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும், அப்போது ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்கிய நாடுகளும் நிறுவனங்களும் இலங்கையின் கடனை மறுசீரமைக்க மறுத்ததாகவும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது சிறந்தது என்று கூறிய அவர், 2020 ஆம் ஆண்டிலேயே அங்கு சென்றிருக்க வேண்டும் என தொடர்ந்து கூறினார்.

மத்திய வங்கியின் ஆளுநராக தாம் பதவியேற்கும் போது கூட இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன கடன் கடிதங்களுக்கு வெளிநாட்டு நாணயங்களை ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் இருந்ததாக அவர் கூறினார்.

தி ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய கலந்துரையாடலின் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.