பொரளை கனத்த மயானத்தில் நேற்றையதினம் காருக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல தொழிலதிபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நேற்று மதியம் தினேஷ் ஷாப்டர் (51) கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து புறப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் மாலையில் அவரை தொடர்புகொள்ளமுடியவில்லைஅதன் பின்னர் அவர் உள்ள இடத்தை ஜி.பிஎஸ் துணையுடன் அவரது மனைவி கண்டுபிடித்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரின் பின் ஆசனத்தில் கட்டப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டார் கழுத்தை சுற்றி வயர் காணப்பட்டது என பொலிஸார் தெரிவித்திருந்ததாக வீரகேசரி உட்பட பல ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதேவேளை தினேஷ் ஷாப்டர் பற்றி மேலும் அறியவருவதாவது
தினேஷ் ஷாப்டர் இந்த நாட்டின் காப்புறுதித்துறையின் தந்தையாக கருதப்படும் சந்திரா ஷாப்டரின் புதல்வர் . மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
நேற்றையதினம் வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது தனக்கு பெருந்தொகையான பணத்தை வழங்கவேண்டிய ஒரு நபரைச் சந்திப்பதற்காக செல்வதாக மனைவியிடம்கூறிவிட்டே சென்றிருக்கின்றார்.
வீட்டிலிருந்து சென்று பல மணிநேரமாகியும் கணவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை எடுத்துள்ளார்.
அப்போது அவரது கைத்தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தமையால் ஜிபிஎஸ் மூலம் கணவரது கார் பொரளை கனத்த மாயனத்தில் இருப்பதைக் கண்டறிந்து நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரை அங்கு அனுப்பிவைத்துள்ளார்.
அந்த ஊழியர் சென்றுபார்த்த போது கனத்த மயானத்தில் டினேஷ் ஷாவ்டர் அவரது டொயோட்டா காரின் ஆசனத்தில் இறுகக்கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார். அவரது கைகள் கழுத்து என்பன வயரினால் கட்டப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்போது இருக்கும் கேள்வி கொழும்பு 7ல் பிளவர் வீதியை வதிவிடமுகவரியாகக் கொடுத்த 51 வயதுடைய டினேஷ் ஷாப்டரின் உயிரை எடுக்கும் அளவிற்கு யார் முயன்றிருக்கப் கூடும் என்ற கேள்விகள் எழுகின்றன.
தற்போது பொலிஸார் விசாரணைகளை பொரளைப் பொலிஸாரும் குற்றவியல் விசாரணைத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுள்ளன.
பிரபலமான கிரிக்கட் வர்ணனையாளர் ஒருவர் டினேஷ் ஷாப்டரிடம் பலகோடிக்கணக்கான பணத்தைக் கடனாகப் பெற்று திருப்பிக் கொடுக்காத நிலையில் மூன்று முறை குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.