புதிய அரசியல் கலாசாரமொன்று நாட்டுக்கு தேவை!

0
92
Article Top Ad

நாட்டின் இளைஞர்களிடையே வேரூன்றிய புதிய அரசியல் சக்தியொன்று நாட்டுக்குத் தேவை என 43ஆவது பிரிவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கூட்டணி என்பது ஒவ்வொரு அரசியல் கட்சியினதும் உரிமை, ஆனால் நாடு எதிர்நோக்கும் போராட்டமும் வங்குரோத்து நிலையும் புதிய அரசியல் சக்தியின் அவசியத்தை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு இப்போது ஒரு மாற்று தேவை. எமது கூட்டணி நன்றாக உள்ளது. கூட்டணி அமைப்பது அந்தந்த கட்சிகளின் உரிமை. ஆனால் இந்த நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த புதிய அரசியல் சக்தி, புதிய அரசியல் கூட்டணி, குறிப்பாக இளம் தலைமுறையில் வேரூன்றிய ஒரு அரசியல் இயக்கம் தேவை என்பதே இந்த நாடு இன்று எதிர்நோக்கும் வங்குரோத்து நிலையிலிருந்தும் கடந்த காலப் போராட்டத்திலிருந்தும் வெளிப்படுகிறது.