கொழும்பு துறைமுக நகரத்திற்கு புதிய விசாக்கள் அறிமுகம்

0
119
Article Top Ad

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற சேவைகளுக்காக வரும் முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கு புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விசா வகைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* வதிவிட வீசா வகையின் கீழ் முதலீட்டாளர்களுக்கான ´முதலீட்டாளர் விசா´ வகை
* சேவை வழங்குநர்களுக்கான ´சேவை வழங்குநர் விசா´ வகை
* கொழும்பு துறைமுக நகரத்தில் குத்தகை அடிப்படையில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களுக்கான ´சீபிசீ வதிவிட சொத்து குத்தகையாளர் விசா’ என்ற வகையில் விசாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.