நியாயமான கொவிட்-19 தடுப்பூசிகளை அணுகவும் விநியோகிக்கவும் மற்றும் நாட்டின் தடுப்பூசி முறை மற்றும் தொற்றுநோய்ப் பிரதிபலிப்பை வலுப்படுத்தவும்
இலங்கைக்கு உதவுவதற்காக 80.5 மில்லியன் டொலர் (1600 கோடி இலங்கை ரூபா) மேலதிக நிதியுதவியை வழங்குவதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மேலதிக நிதியானது உலக வங்கியால் 2020 ஏப்ரல மாதத்தில் அங்கீகரிக்கப்பட்ட 217.56 மில்லியன் டொலர் இலங்கை கொவிட் -19 அவசரகால
பிரதிபலிப்பு மற்றும் தொற்றுநோய் தயார்நிலைச் செயற்றிட்டத்தைக் கட்டியெழுப்புகின்றது.
இந்த புதிய நிதி ஏறத்தாழ 4 மில்லியன் மக்களை (இலங்கையின் மக்கள் தொகையில் 18 சதவீதம்) உள்ளடக்கிய தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய உதவும்.
அதற்கு மேலதிகமாக, இலங்கையின் மக்கள்தொகையில் 20 சதவீதத்திற்குப் பாதுகாப்பான மற்றும் வினைத்திறன் வாய்ந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கான
செலவுகளை அதன் மக்கள்தொகையில் குறைந்தது 60 சதவீதத்திற்காவது தடுப்பூசி வழங்கும் இலக்கை பூர்த்தி செய்யும்.
இந்த மேலதிக நிதியானது சுகாதார அமைச்சின் (ஆழுர்) தேசிய தடுப்பூசி வழங்கல் திட்டத்தை செயல்படுத்த உதவும்.
‘இலங்கை தனது சோதனை, தடமறிதல் மற்றும் சிகிச்சை வழங்கல் தொற்று நோய் முகாமைத்துவ மூலோபாயத்தை செயல்படுத்துவதில் மீளெழுச்சியை
வெளிப்படுத்தியுள்ளது, இது அதன் நன்கு நிறுவப்பட்ட பொது சுகாதார முறையில் தங்கியுள்ளது’ என்று மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான உலக வங்கி வதிவிடப் பணிப்பாளர் ஃபாரிஸ் எச். ஹதாத்-செர்வோஸ் கூறினார்.
‘தொற்றுநோயால் தூண்டப்பட்ட தாக்கங்களிலிருந்து மீளுவதற்கு, மேம்பட்ட தடுப்பூசித் திட்டங்கள் மற்றும் நோய் தீர்க்கும் மற்றும் நோய்த் தடுப்பு சுகாதார
பராமரிப்பு மூலம் அதன் மக்களைப் பாதுகாப்பதற்கு அதன் சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்தவும் சித்தப்படுத்தவும் இலங்கைக்கு நிலையான நிதி வழிமுறைகள் தேவை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்றுநோய்களின் விளைவுகளை குறைப்பதில் அரசாங்கத்திற்கு உதவுவதற்காக அதன் தற்போதைய முதலீட்டுப் பரப்பெல்லையில் பெரும் பகுதியை நோக்கம்
மாற்றிப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் கொவிட்-19 பரவலுக்கு உலக வங்கி பிரதிபலிப்புச் செய்தது. முக்கியமான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (PPE), மருத்துவப் பொருட்கள் மற்றும் பி.சி.ஆர் சோதனைகளை வழங்குதல்,
பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தற்காலிக பண உதவி வழங்குதல், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் ஆய்வக திறனை வலுப்படுத்துதல், கண்காணிப்பு மற்றும் தொடர்பு தடமறிதல் நடவடிக்கைகளை
மேம்படுத்த சமூக சுகாதார அதிகாரிகளுக்கு இயக்க ஆதரவை மேம்படுத்துதல், இடர் தொடர்பாடல் நடவடிக்கைகள் மற்றும் கொவிட்-19 இன் தாக்கத்துடன் தொடர்புடைய
மனநல சுகாதார சேவைகள் ஆகியன உலக வங்கியால் ஆதரிக்கப்படும் சில முயற்சிகளாகும்.
இலங்கைக்கான இந்த நிதியுதவிக்கு மேலதிகமாக, கடந்த மாதம், உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபையானது கொவிட்-19 தடுப்பூசி முயற்சிகளுக்கு
ஆதரவளிக்க ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 688 மில்லியன் டொலர்களை ஒப்புதல் அளித்தது.
நிதியுதவிக்கு மேலதிகமாக, நியாயமான மற்றும் சமமான தடுப்பூசி உத்திகளை வடிவமைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில்
தெற்காசியாவில் உள்ள நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவு பகிர்வு செயலமர்வுகளையும் வங்கி வழங்குகிறது.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான நிதி மற்றும் அறிவின் மிகப்பெரிய மூலங்களில்; ஒன்றாகிய உலக வங்கி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு
கொவிட்-19 இன் சுகாதாரம், சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களுக்கு பதிலளிக்க உதவும் பரந்த, விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஊழுஏஐனு-19 தடுப்பூசிகள், சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வாங்கவும் விநியோகிக்கவும்
மற்றும் தடுப்பூசி முறைகளை வலுப்படுத்தவும் இது 12 பில்லியன் டொலர்களை உள்ளடக்கியது.
100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தவும், ஏழ்மையான குடும்பங்களுக்கு ஆதரவளிக்கவும், கடுமையாக
பாதிக்கப்படுபவர்களுக்கு வாழ்வாதாரங்களையும் வேலைகளையும் பராமரிக்க ஆதரவான நிலைமைகளை உருவாக்கவும் உதவும் பரந்த உலக வங்கி குழு கொவிட் -19 பிரதிபலிப்பை இந்த நிதி கட்டியெழுப்புகின்றது.