கொரோனாவை உலகில் வெற்றிகரமாக கையாண்ட நாடு என்ற உலகக் கவனத்தில் திழைத்திருந்த இஸ்ரேலில் எதிர்பாராத துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில் லேக் பி ஒமெர் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க வந்த யாத்ரீகர்கள் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் சுமார் 45 பேர் பலியானார்கள்.
அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் லெக் பி ஓமர் மலைப்பகுதிகளின் கீழ் ஒன்றுகூடும் பாராம்பரிய யூத மக்கள் தீப்பந்தம் ஏந்தி பிராத்தனையில் ஈடுபடுவார்கள்.
இந்த நிகழ்வு கடந்த ஒரு வருடத்திற்கு பிறகு மெரோன் நகரில் கொண்டாடப்பட்டது. பெருமளவானோர் கலந்துகொண்ட இந்த நெருப்பு திருவிழாவில் கூட்ட நெருசலில் சிக்குண்ட 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில்இ மீட்பு பணிகள் தொடர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அசம்பாவிதத்திற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சம் நெதன்யாகு இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.