இந்திய வெளிவிவகார அமைச்சர், எஸ்.ஜெய்சங்கரின் கொழும்பு விஜயத்தின் போது இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியாவின் பல்வேறு ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என இந்திய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இந்தியாவுடன் எரிசக்தி பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, நாணய மாற்று ஏற்பாடுகள் ஆகிய துறைகளில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அத்துடன் இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்தும் பேசப்படுகிறது. இவரின் இலங்கைக்கான இரண்டு நாள் பயணத்தில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.ஜெய்சங்கர் நாளைமறுதினம் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நாளை இலங்கை வரவுள்ளார். இதன்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் உட்பட இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.