தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யார் யாரை அமைச்சராக்குவது என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வென்றுள்ளது. 125 தொகுதிகளில் வென்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.
வரும் 7-ம் திகதிவெள்ளிக்கிழமை முதல்வராக ஸ்டாலினும், 32 அமைச்சர்களும் பதவியேற்க இருப்பதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சரவை அமைப்பது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக திமுக முக்கிய நிர்வாகி ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் தெரிவித்தார்.
மூத்த தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்கள் பெரும்பான்மையாக உள்ள சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலும் அமைச்சரவையை ஸ்டாலின் அமைக்க இருப்பதாக திமுகவினர் கூறுகின்றனர்.
கருணாநிதி அமைச்சரவையில் இருந்த துரைமுருகன், ஐ.பெரியசாமி, க.பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், கே.ஆர்.பெரியகருப்பன், ஆ.தமிழரசி, க.ராமச்சந்திரன், கு.பிச்சாண்டி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராவது உறுதி என்று திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்து தேர்தலில் வென்றுள்ள வி.செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன்,பி.கே.சேகர் பாபு, ராஜ கண்ணப்பன்,
சு.முத்துசாமி, எஸ்.ரகுபதி ஆகியோரில் ஒரு சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
உதயநிதி, அர.சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டாக்டர் நா.எழிலன், அ.வெற்றி அழகன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன் கே.பி.சங்கர், ஒய்.பிரகாஷ் (ஓசூர்),காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்),
எஸ்.எஸ். சிவசங்கர் (குன்னம்) டி.ஆர்.பி.ராஜா(மன்னார்குடி) பூண்டி கலைவாணன் (திருவாரூர்) அப்துல் வகாப்(பாளையங்கோட்டை) பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.
பேரவைத் தலைவராக துரைமுருகன், அர.சக்கரபாணி பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் மூலம் : தி ஹிந்து