சிங்கப்பூரில் ஜனாதிபதி தேர்தலில் குதிக்கும் இலங்கை தமிழன்!

0
113
Article Top Ad
சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூர் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் யாழ் – ஊரெழு மற்றும் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார்.
ஜனாதிபதி தேர்தலில் பங்குகொள்வதற்காக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் (MAS), GIC இன் துணைத் தலைவர், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் அமைச்சர் பதவியில் அவர் ஆற்றி வரும் பிற பொறுப்புகளில் இருந்து விலகுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கபூர் ஈழத் தமிழனின் கையில் வர அனைத்து ஈழத் தமிழரும் இறைவனை பிரார்த்திப்போம்.