உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பிரேரணைக்கு பாராளுமன்றில் அங்கீகாரம்!

0
113
Article Top Ad

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட பிரேரணை பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை மீதான விவாதம் இன்று (1) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன்படி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட பிரேரணை திருத்தங்களுடன் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்..