டிக்கட் விற்பனையில் சாதனை படைக்கும் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்டம்

0
175
Article Top Ad

அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் மகளிர் விளையாட்டு வரலாற்றிலே அதிக டிக்கட்கள் விற்பனை செய்யப்பட்ட உலகக்கிண்ணம் என்ற சாதனையைப் புரிந்துள்ளது.

2019ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற மகளிர் உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டப் போட்டிகளின் போது 15லட்சம் டிக்கட்கள் விற்கப்பட்டதே இதுவரை மகளிர் விளையாட்டில் சாதனையாக இருந்தது. ஆனால் தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளையும் சராசரியாக 30,326 ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இது 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 72 சதவீத அதிகரிப்பாகும் . அப்போது ஒவ்வொரு போட்டியையும் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 21,756 ஆக இருந்தது . உலகில் 200 கோடிப்பேர் இம்முறை மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகளை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் வழியாகப் பார்வையிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

32 ஆண்டுகளுக்கு முன்னர் முதலாவது மகளிர் உலகக்கிண்ணம் பெற்றது தற்போது 9வது மகளிர் உலகக்கிண்ண போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை அதிக பட்சமாக 4 தடவைகள் அமெரிக்க மகளிர் அணியே உலக சம்பியனாகியுள்ளது. கடைசியாக பிரான்சில் நடைபெற்ற போட்டிகளிலும் அமெரிக்காவே உலக சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.