அவுஸ்திரேலியாவிற்கு எதிரான Ashes ஆஷஸ் டெஸ்ட் கிsரிக்கெட் தொடரின் 5வது போட்டியில் இங்கிலாந்து அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
Every single wicket from a magical final day of the 2023 Ashes ✨#EnglandCricket | #Ashes pic.twitter.com/vS8810TX65
— England Cricket (@englandcricket) July 31, 2023
4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் அவுஸ்திரேலிய அணி 2க்கு1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனால், இந்த தொடரை சமனில் முடிக்க இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் 295 ரன்கள் எடுத்தது. 12 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தது. இதில் இங்கிலாந்து அணி 395 ஓட்டங்களைக் குவிக்க ஆஸ்திரேலிய அணிக்கு 384 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
384 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்கள் டேவிட் வோர்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான அத்திவாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தபோது அவுஸ்திரேலியா எளிதில் வெற்றிபெறலாம் என்ற எண்ணம் மேலோங்கியது. எனினும் வோர்னர் கவாஜா மற்றும் மூன்றாம் இலக்க வீரர் மார்னஸ் லபுஷேன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோது சிறிது தயக்கம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலிய அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையை 260 ஐக் கடக்க வழிகோலிய போதும் மீண்டும் அவுஸ்திரேலிய வெற்றிவாய்ப்பு குறித்த நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் ட்ராவிஸ் ஹெட்டின் ஆட்டமிழப்புடன் அடுத்தடுத்து 4 விக்கட்கள் வீழ்ந்த நிலையில் அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்களை இழந்து இக்கட்டு நிலையில் இருந்தது.
கடைசி இருவிக்கட்டுகளை கைப்பற்ற மீண்டும் போராடிய இங்கிலாந்து அணி ஒருவழியாக 334 ஓட்டங்களுக்கு அவுஸ்திரேலியாவை ஆட்டமிழக்கச் செய்து வெற்றியை உறுதிசெய்யது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில்இ இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா 2க்கு2 என்ற கணக்கில் வென்று சமனில் முடிந்தது. 4வது டெஸ்டில் மட்டும் மழை பெய்யாமல் இருந்திருந்தால், இந்நேரம் இங்கிலாந்து அணி தொடரை வென்று இருக்கும். இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய அணி 21 ஆண்டுகளாக ஆஷஸ் தொடரை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.