நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை பெற்றோலிய குழாய் திட்டம் – பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

0
91
Article Top Ad

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பெற்றோலிய குழாய்த்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்

இந்திய விஜயத்தின் போதே பெற்றோலிய குழாய்த்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாக அறவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து, இலங்கையில் யாழ்ப்பாணம் வரை பெற்றோலிய குழாய் திட்டத்தை அமைப்பதற்கான முன்மொழிவுகள் தற்போது விவாதத்தில் உள்ளன.

இருப்பினும், பெற்றோலிய குழாய் திட்டத்தின் முன்மொழிவுகள் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளன.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்குவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பெற்றோலிய குழாய்த்திட்டம் தொடர்பான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாக மின்வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டதுடன் எரிபொருளுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டன. இதன் காரணமாகவே இந்தியாவுடன் தொழில்நுட்ப ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதில் இலங்கை தீவிரம் காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.