பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டில் மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டை மறுத்துள்ள இம்ரான் கான், மேல்முறையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அவரை உடனடியாக கைதுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் லாகூரில் உள்ள அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் 2018 ஆம் ஆண்டு பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். எனினும், கடந்த ஆண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட பதவி நீக்கப்பட்டார்.
நீதிமன்றத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், சில சட்டத்தரணிகள் உட்பட ஒரு கூட்டம் கட்டிடத்திற்கு வெளியே “இம்ரான் கான் ஒரு திருடன்” என்று கோஷமிடத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது