அவுஸ்திரேலியாவிற்காக ஒலிம்பிக்கில் சாதிக்கத் துடிக்கும் இலங்கை சிறுமி!

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்

0
546
Article Top Ad
அவுஸ்திரேலிய தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் தெரேசா அந்தனி…

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான முப்பாய்ச்சலில், குயிண்ஸ்லாந்து மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய 15 வயதுடைய தெரேசா அந்தனி  வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒரு சாதனைப் பெண்ணாக மாறியுள்ளார்.

மேலும் குறித்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 16 வயதுக்குட்பட்டோருக்கான நீளம் பாய்தலில் நான்காமிடத்தையும், உயரம் பாய்தலில் ஒன்பதாமிடத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.

குயிண்ஸ்லாந்து மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த போட்டியில் பங்கேற்ற தெரேசா அந்தோனி, மாநில ரீதியாக நடைபெற்ற போட்டிகளில் பல பதக்கங்களை வென்று தன்னுடைய திறமையை நிரூபித்ததன் மூலம் தான் அவருக்கு இவ்வாறு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

குயின்ஸ்லாந்து மாநில மெய்வல்லுநர் போட்டிகளில் …

கடந்த மார்ச் மாதம் மாநில ரீதியாக நடைபெற்ற போட்டியில் தெரேசா அந்தனி  முப்பாய்ச்சலில் தங்கப் பதக்கத்தையும் நீளம் பாய்தலில் வெள்ளிப் பதக்கத்தையும், உயரம் பாய்தலில் நான்காமிடத்தையும் பெற்றிருந்தார்.

ஒலிம்பிக்கில் அவுஸ்திரேலியாவிற்காக களமிறங்க வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் பிறந்து மெய்வல்லுநர் போட்டிகளில் சாதித்துக்கொண்டிருக்கும் தெரேசா அந்தனியின் பெற்றோர் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.