கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பினரின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பழமையான லக்ஷ்மி நாராயண கோவில் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்கியுள்ளனர்.
இதன் பின்னர் கோவிலின் சுவர்கள் மற்றும் வாயில் கதவுகளில் காலிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அண்மையில் காலமான காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளில் இந்த செயற்பாடுகள் குறித்து கனேடிய இந்து அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
இரண்டு சீக்கியர்கள் கோவிலுக்குள் நுழைந்து சுவரொட்டிகளை ஒட்டும் காணொளிகள் வெளியாகியுள்ளன.
முகமூடி அணிந்த சீக்கியர்கள் அவ்வப்போது கனடாவில் உள்ள இந்து கோவில்களை தாக்கி வருகின்றனர்.
இந்த வருடத்தில் கனடாவில் தாக்கப்பட்ட நான்காவது ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவது குறித்து பிரிட்டிஷ் கொலம்பியா மேயர் கிர்க் பேட்ரிக் கவலை தெரிவித்துள்ளார்.
கோவிலில் முகமூடி அணிந்த இருவரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில்,ஜூன் 18 சம்பவத்தில் இந்தியாவின் பங்கை கனடா விசாரிக்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.
நிஜ்ஜர் காலிஸ்தான் புலிப்படையின் தலைவராக பணியாற்றியதுடன் அவர் கனடாவின் சர்ரேயில் இரண்டு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.