2023-24ம் ஆண்டுக்கான ப்ர்மியர் லீக் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகியது.
குறித்த தொடரில் மென்செஸ்டர் யுனைடெட், ,மென்செஸ்டர் சிட்டி , லிவர்பூல் போன்ற இங்கிலாந்தின் 20 முன்னணி கழகங்கள் போட்டியிடுகின்றன.
கடந்த பருவக்காலத்துடன் ஒப்பிடுகையில் பல திறமையான வீரர்களை அணிகள் புதிதாக ஒப்பந்தம் செய்துள்ளன.
அதே போல சில வீரர்கள் ப்ர்மியர் லீக் போட்டியில் இருந்து விலகி ஏனைய கால்பந்தாட்ட தொடர்களில் இணைந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது
அதற்கமைய இன்றைய தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியன் மென்செஸ்டர் சிட்டி அணியும் பர்ன்லி (Burnley) அணியும் மோதிக்கொண்டன.
போட்டி ஆரம்பமாகிய 183 செக்கன்களில் கால்பந்தாட்ட உலகின் இளம் நட்சத்திர வீரரான நோர்வே நாட்டை சேர்ந்த எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) அணிக்கான முதலாவது கோலை பதிவு செய்தார்
இந்த கோலின் மூலம் மென்சேஸ்டெர் சிட்டி அணியானது போட்டியின் ஆரம்பத்திலேயே எதிரணி மீது அழுத்தம் கொடுத்தனர்
தொடர்ந்த போட்டியின் முதலாவது பாதியின் 36வது நிமிடத்தில் அணிக்கான இரண்டாவது கோலையும் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) பதிவு செய்தார்.
கடந்த பருவகாலத்தில் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) அதிகளவிலான கோல்களை (49) பதிவு செய்தார் .
அதற்கமைய எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) கடந்த பருவக்காலத்தில் எங்கு தனது கோல் மழையை நிறுத்திக்கொண்டாரோ அங்கு இருந்தே மீண்டும் தொடர்ந்தார்
அதற்கமைய போட்டியின் முதலாம் பாதி முடிவில் மென்சேஸ்டெர் சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
முதலாம் பாதி முடிவில் பர்ன்லி (Burnley) அணியால் எந்த ஒரு கோலையும் பதிவு செய்ய முடியாமல் போனது.
அதற்கமைய தொடர்ந்த போட்டியின் இரண்டாம் பாதியின் 75வது நிமிடத்தில் மென்சேஸ்டெர் சிட்டி அணி வீரர் ரொட்ரி அணிக்கான மூன்றாவது கோலை பதிவு செய்தார்
இரண்டாம் பாதியின் முடிவிலும் பர்ன்லி (Burnley) அணியால் எந்த ஒரு கோலையும் பதிவு செய்ய முடியாமல் போனது.
மேலும் பர்ன்லி (Burnley) அணியின் வீரரான அனாஸ் ஸரோரி (Anass Zaroury ) 94வது நிமிடத்தில் கால்பந்தாட்ட விதி முறைகளை மீறியதால் சிவப்பு அட்டை வழங்கப்பட்டது.
இதன் காரணமாக அனாஸ் ஸரோரி (Anass Zaroury ) அடுத்து வரும் லூடன் டவுன் (Luton Town) அணியுடனான போட்டியில் விளையாட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பர்ன்லி (Burnley) அணியின் பயிற்றுவிப்பாளர் Vincent Kompany முன்னால் manchestercity வீரர் ஆவர்