14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் தலைமைத்துவப் பயிற்சிக்காக வருகை தந்திருந்த பாடசாலை மாணவிகள் மீது இலங்கை விமானப் படையின் விமானங்கள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 53 மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் ஆகியோரின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செஞ்சோலை வளாகத்தில் இன்று உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
செஞ்சோலை படுகொலை நினைவு நாள்.. pic.twitter.com/IsEKeDhOjY
— Keeran (@OffKeeran) August 14, 2023
சமூகச் செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன் தலைமையில் குறித்த பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கு சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2006.08.14 அன்று செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடாத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினது 17 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று#chensolai #tamilgneoside pic.twitter.com/Fzs87Ly3O1
— Thavaseelan (@ShanmugamThava2) August 14, 2023
குறித்த பகுதியில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகச் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு!
செஞ்சோலைப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி – ஈகைச் சுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 53 பாடசாலை மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
……