மகளிர் உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் இங்கிலாந்து !

0
114
Article Top Ad

மகளிர் உலகக்கிண்ண இறுதியாட்டத்திற்கு முதன்முறையாக தகுதி பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது இங்கிலாந்து அணி. இன்றையதினம் சிட்னியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போட்டிகளை நடாத்தும் இணைநாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்து இந்த வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது இங்கிலாந்து.

போட்டி ஆரம்பித்து 36வது நிமிடத்தில் Ella Toone  முதலாவது கோலைப் இங்கிலாந்திற்காக   பதிவுசெய்தார். அதன் பின்னர் 63வது நிமிடத்தில் Samantha Kerr அவுஸ்திரேலியாவிற்கு கோல் அடித்து 1-1 என சமன் செய்தார். பின்னர் 71நிமிடத்தில் Lauren Hemp அலாதியான கோலை அடித்த இங்கிலாந்தை முன்னிலையில் நிறுத்தினார். இதன் பின்னர் 86வது நிமிடத்தில் Alessia Russo கோல் அடித்து வெற்றியை உறுதிசெய்தார். இந்தவகையில் 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

1966ஆம் ஆண்டில் இங்கிலாந்து ஆடவர் கால்ப்பந்தாட்ட அணி உலகக்கிண்ணத்தை வென்ற பின்னர் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை மகளிர் அணி பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.