22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராகும் சிம்பாவே

0
95
Article Top Ad

இங்கிலாந்து மற்றும் சிம்பாவே அணிகளுக்கிடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் 2025ஆம் ஆண்டு நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன் மூலம் சிம்பாவே கிரிக்கெட் அணி 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடவுள்ளது.

சிம்பாவே அணி இறுதியாக 2003ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி இருந்தது.

குறித்த போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

அதன்பிறகு இரு அணிகளும் இங்கிலாந்தில் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவில்லை.

இந்த நிலையில், எதிர்வரும் 2025ம் ஆண்டு சிம்பாவே – இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமைச் செயல் அதிகாரி ரிச்சர்ட் கோல்ட் தெரிவிக்கையில்,

சிம்பாவே கிரிக்கெட் சபையுடன் நட்பான உறவில் இருக்க இங்கிலாந்து கிரிக்கெட் சபை விரும்புகிறது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்துள்ளோம்.

இந்த டெஸ்ட் போட்டி எதிர்வரும் 2025ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பாவே அணியுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது.’ என தெரிவித்தார்.