9வது மகளிர் கால்பந்து உலகக்கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து ஸ்பெயின் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.சிட்னியிலுள்ள ஸ்டேடியம் அவுஸ்திரேலியாவில் சற்று முன்னர் நிறைவடைந்த இறுதிப்போட்டியில் 1ற்கு 0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றியீட்டி முதன்முறையாக சம்பியன் பட்டம் வென்றது.
SPAIN IS THE CHAMPION OF THE WORLD!#FIFAWWC pic.twitter.com/Gsl9Tm6bIU
— TSN (@TSN_Sports) August 20, 2023
இதற்கு முன்னர் 1992ம் ஆண்டு முதல் நடைபெற்ற 8 மகளிர் உலகக்கிண்ண போட்டிகளில் நான்கு முறை அமெரிக்காவும் இரண்டு முறை ஜேர்மனியும் ஜப்பான் மற்றும் நோர்வே ஆகியன தலா ஒரு முறையும் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கே வெற்றி அதிகம் என எதிர்வுகூறப்பட்டது .இதற்கு முன்னைய போட்டிகளில் எதிரணிகளை இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியமையே காரணமாக அமைந்தது. எனினும் இறுதிப்போட்டியில் சகல துறைகளிலும் ஸ்பெயின் அணி இங்கிலாந்தை விட சிறப்பாக செயற்பட்டது .
போட்டியின் 29வது நிமிடத்தில் ஒல்கா கார்மோனா சிறப்பான முறையில் கோல் ஒன்றை அடித்து ஸ்பெயின் அணியை முன்னணியில் நிறுத்தினார் .
அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு இங்கிலாந்து அணிக்கு நீண்ட நேரமெடுத்தது. போட்டியின் 69வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹேர்மோசோ தவறவிட்டார் . இதனையடுத்து மூர்க்கமாக விளையாடிய இங்கிலாந்து அணி கோல் அடிப்பதற்கு பலமுறை முயன்றபோதும் அது கைகூடவில்லை.
90 நிமிடங்கள் முடிந்து உபாதைகள் காரணமாக வழங்கப்படும் மேலதீக 13 நிமிட நேரத்திலும் மேலதீகமாக கோல்கள் ஏதும் பெறப்படாத நிலையில் 1ற்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக ஸ்பெயின் அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
The moment Spain won the World Cup.#ESP | #FIFAWWC pic.twitter.com/95L4NYR4u5
— The Athletic | Football (@TheAthleticFC) August 20, 2023
ஜேர்மனியைத் தொடர்ந்து ஆண்கள் மற்றும் மகளிர் கால்பந்து உலகக்கிண்ண சம்பியன் பட்டங்களை வென்ற அணி என்ற பெருமையை ஸ்பெயின் மகளிர் அணி தனதாக்கியது. 2010ம் ஆண்டில் ஸ்பெயின் ஆடவர் அணி உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.