மோல்டாவில் பண முதலீடு – அனுரகுமார வழங்கிய பதில்

0
72
Article Top Ad

மோல்டா நாட்டில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டில் எவ்வித உண்மையும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சுமத்தும் இந்த குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுமாறும் அவர் சவால் விடுத்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

நாங்கள் தீவுகளில் பணத்தை முதலீடு செய்துள்ளதாக ஒருவர் கூறினார். இதனையடுத்து திஸ்ஸ குட்டி எமக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

சிறிது காலத்தில் என்னை சிறைக்கு அனுப்புவாராம். நானோ, எனது கட்சியில் உள்ளவர்களோ நாட்டு மக்களின் பணத்தில் ஒரு சதத்தை கூட கொள்ளையிட்டதில்லை.

நாங்கள் பொது மக்களின் பணத்தை மோசடி செய்திருந்தால், இப்படியான விதத்தில் அரசியலில் ஈடுபட முடியாது.

இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக நடக்கும் அரசியல் யுத்தம் பற்றி கூறும் அனுரகுமார
ஊழல்,மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்க என்னிடம் அதிகாரம் இருக்கின்றதா என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஒரு நாள் பாராளுமன்றத்தில் கூறினார்.

அப்படியான அதிகாரம் எனக்கு இருந்தால், முன்வரிசையில் உள்ளவர்களில் பலர் சிறையில் இருப்பார்கள் என நான் கூறினேன்.

எமது அமைப்பு சேறுபூசும் அரசியல் போன்றவற்றை கண்டு சளைத்து போகும் அரசியல் அமைப்பு அல்ல.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரிவு என்பது இலங்கையில் அண்மைய காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை.

நாட்டில் வெவ்வேறு அரசியல் அணிகளை ஏற்படுத்தினர். ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்ளும் நாட்டை உருவாக்கினர்.

எனினும் முதல் முறையாக பிரபு அரசியல் வர்க்கத்தினருக்கு எதிரான பொது மக்களின் ஒருங்கிணைப்புடன் கூடிய அரசியல் அமைப்பு உருவாகியுள்ளது.

இதுதான் சந்தர்ப்பம். இதுவே கைப்பற்ற வேண்டிய சந்தர்ப்பம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.