நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியா உற்பத்திகளுக்கு வரிகளை விதிப்பேன்-டொனால்ட் ட்ரம்ப்

0
75
Article Top Ad

இந்தியாவில் அமெரிக்காவின் சில உற்பத்தி பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தான் மீண்டும் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், இந்தியாவின் வரி விதிப்புக்கு பதிலடி இந்திய உற்பத்தி பொருட்களுக்கு வரி விதிக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அமெரிக்க உற்பத்தி பொருட்களுக்கு விதிக்கப்படும் வரி மிக அதிகம். ஹார்லி டேவிட்சன் போன்ற அமெரிக்க மோட்டார் சைக்கிள்களுக்கு இந்தியா அதிக வரி விதித்து வருகிறது.

100 வீத வரியில் இருந்து 150 வீதம் 200 வீதம் வரை வரிகள் இந்தியாவில் விதிக்கப்படுகின்றன.

எனினும் இந்தியாவின் உற்பத்திகளுக்கு அமெரிக்கா பெரியளவில் வரிகளை விதிப்பதில்லை, அந்நாட்டின் உற்பத்திகளுக்கு வரி ஏதும் விதிக்க வேண்டாமா? இது சரியான அணுகுமுறையல்ல. நாமும் வரி விதிக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றால், இந்தியாவுக்கு சமமான பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.