ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவு

0
100
Article Top Ad

இலங்கையின் வலுசக்தி துறையின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

நிதியமைச்சில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு சமாந்தரமாக இலங்கைக்கு வழங்கக்கூடிய ஆதரவை ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியாக வழங்குமென Takafumi Kadono தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் தொடர்பிலும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை தாம் பாராட்டுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Takafumi Kadono தெரிவித்துள்ளார்.