அமைச்சுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர்களை அமைச்சரவை அமைச்சர்கள் தொடர்ச்சியாக துன்புறுத்துவதற்கு எதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இராஜாங்க அமைச்சர் குழுவொன்று கலந்துரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல்வேறு அமைச்சுகளில் இராஜாங்க அமைச்சர்கள் சேவையாற்றுவதற்கு தேவையான வசதிகளை வழங்காமை தொடர்பில் ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை விரைவில் கையளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இராஜாங்க அமைச்சரின் எல்லை தொடர்பான விடயங்கள் மற்றும் பண ஒதுக்கீடு தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான அமைச்சுகள் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பின் கீழ் பயன்பாட்டில் இல்லாத சில நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், சில நிறுவனங்களில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் பல சந்தர்ப்பங்களில் முறையிட்ட போதும், நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக ஜனாதிபதி உடனடியாக அமைச்சரவையை மாற்றியமைக்கப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சுகளின் செயலாளர்களை கையாள்வதில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், இராஜாங்க அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்களை நியமித்து தனி நோக்கங்களை தயார் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜாங்க அமைச்சு தனியான வரவு-செலவுத் திட்டத்தினை பெற வேண்டுமென ஆலோசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த யோசனை அனைத்தும் அடங்கிய பிரேரணையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து அடுத்த வாரங்களுக்குள் ஜனாதிபதியை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இராஜாங்க அமைச்சர்கள் குழு ஏகமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.