2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டோம் என சிலர் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயமாக போட்டியிடுவேன்.
“அரசாங்கப் பிரதிநிதிகள் குழு கோயபல்ஸின் கொள்கையை நடைமுறைப்படுத்தி புதிய புரளியை உருவாக்குகிறது.
ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டிட்டியிட்டால் சஜித் போட்டியிடமாட்டார் என கூறுகின்றனர்.
நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாரான போது கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டு என்னைத் தோற்கடிக்க சதி செய்தவர்களே இவர்கள்.
கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நான் உயிருடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
தாம் மரணத்திற்கு அஞ்சும் கோழை அல்ல. எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார். ராஜபக்சவுடன் ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்திக்கு பணம் தேடும் வழி பற்றி எவரும் கவலைப்பட வேண்டாம்.அது எனது பொறுப்பு. தீவுகளிலோ, வெளிநாட்டு நிறுவனங்களிலோ, அல்லது நமது நண்பர்களின் தொழில்களிலோ நாம் முதலீடு செய்யவில்லை. இந்த நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை வலுப்படுத்த முதலீடு செய்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.