பிரேசிலின் அமேசான் பகுதியில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்தப் பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Amazonas மாநிலத்தின் தலைநகர் Manaus இல் இருந்து Barcelos வரை பயண நடவடிக்கையினை முன்னெடுத்திருந்த விமானம் தரையிறங்க முற்படுகையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 12 பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விமான விபத்துக்கான காரணங்கள் குறித்து விமானப்படை மற்றும் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்கான அவர்களின் சடலங்கள் Manaus நகருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புலனாய்வாளர்கள் மற்றும் அவசரகால அதிகாரிகள் விபத்து நேர்ந்த இடத்திற்கு பயணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் பகுதியில் மீன்பிடிப்பதற்கான பருவகாலமாக இந்த மாதம் கருதப்படுவதன் காரணமாக, விபத்துக்குள்ளானவர்கள் அனைவரும் மீன்பிடிப்பதற்காக இந்தப் பகுதிக்கு பயணித்திருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.